Monday, March 4, 2024

சிவவாக்கியர் சித்தர் 11 not post

 240. உண்மையான சுக்கிலம் , உபாயமாய் இருந்ததும்.

வெண்மையாகி நீரிலே விரைந்து நீர் அதானதும்.
தன்மையான காயமே தரித்து ரூபமானதும்,
தொன்மையான ஞானிகாள் தெளிந்து உரைக்க வேணுமே!

தந்தையின் விதைப் பையில், லட்சக்கணக்கான உயிர்கள் இருக்கின்றன. ஆனால் அதில் இருக்கும் ஒரு சுக்கு மட்டும் உபாயமாக தயராக இலகி சுக்கிலமாக வெண்மையாகி நீரிலே விரைந்து நீந்தி அந்த தன்மையாக இருந்த காயமே (கருமுட்டையே) சுக்கிலம் தரித்து உன்னுடைய ரூபமாக ஆனதும் எப்படி?
என்பதை தொன்மையான ஞானிகள் தெளிந்து உரைக்க வேண்டும் என்கிறார்.


241. வஞ்சகப் பிறவியை , மனத்துலே விரும்பியே ! அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள்! வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல். அஞ்செழுத்தின் உண்மையை அறிந்து கொள்ளள் ஆகுமே! நாம் இவ்வுலகில் பிறந்து இந்த உலக அனுபவத்தைப் பெற்று அது மிகவும் பிடித்துப் போய் மீண்டும் பிறக்க விரும்பி பிறந்து கொண்டு இருக்கிறோம். எங்கே இந்த அஞ்செழுத்தின் உண்மைகளை அறிந்து கொண்டால் இந்த பிறவி எடுப்பது நின்று விடும் என்பதால் அந்த அஞ்செழுத்தின் உண்மைகளை அறியாமல் இருக்கிறோம். ஆனால் இந்த வஞ்சகப் பிறவியை வதைத்து மீண்டும் பிறக்காமல் இருக்க வேண்டுமானால் இந்த அஞ்செழுத்தின் உண்மைகளை அறிந்து கொள்ளல் வேண்டும் என்கிறார்.



242. காயிலாத சோலையில் கனி புகுந்த வண்டுகால். ஈ இலாத தேனை உண்டு, ராப்பகல் உறங்குறீர். பாயிலாத கப்பல் ஏறி அக்கரைப் படும் உன்னை! வாயினால் உரைப்பதாகும் ஓம் மௌன ஞானமே! பழமரங்கள் நிறைந்து இருப்பது தான் சோலை. அந்த மாதிரி சோலையில் காய்கள் இல்லா விட்டால கனிகள் இருக்காது. கனிகள் இல்லாவிட்டால் வண்டு அங்கே இருக்காது. அது போல இந்த சடங்குகளின் உண்மை அறிவியல் உணராமல் இல்லாத வெறும் சடங்குகளைச் செய்தால் மட்டும் இந்த பிறவிக் கடலை நீந்தி கரையேர முடியாது என்கிறார். ஏதோ மந்திரங்களைக் படித்துக் கொண்டு அந்த உச்சரிப்பில் ஆண்மீகம் அடைந்து விட்டோம் என நினைப்பது, தேன் ஈ எடுக்காத தேன் போல இருக்கும் எதையோ உண்டு விட்டு , தேன் உண்டு விட்டோம் என்றும் இனி பிறவிப் பெருங்கடலை நீந்தி விடுவோம் என்று ராப்பகலாய் உறங்குறீர் என்கிறார். ஒரு கடலை கடக்க பாய்மரம் இல்லாத கப்பலில் ஏறி கடக்க முயலும் உன்னைப் போன்றவர்கள் தான் இந்த ஓம் எனும் மந்திரத்தை வாயினால் உரைப்பதும், மௌனமாக ஓம் உரைக்கும் ஞானமும். என்கிறார். ஓம் மற்றும் நமசிவாய எனும் எழுத்துக்களின் உண்மைகளை அறிந்து உணர்நது கொள்வதுதான் உண்மையான ஞானம்.



244. மூலமண்டலத்திலேயும் முச்சதுரம் ஆதியாய், நாலு வாசல் எம்பிராண் நடு உதித்த மந்திரம். கோலி எட்டு இதழுமாய், குளிர்ந்தழர்ந்த தீட்டமாய், மேலும் வேறு காண்கிலேன், விளைந்ததே சிவாயமே! மூல மண்டலம் என்றால் இந்த பால் வெளி மலர்ந்த அந்த இடம். அந்த மூலமண்டலம் அதிர்வாய் சத்தமாய் மலர்ந்து காற்று, வெப்பம், நீர் என ஆதியாய் முச்சதுரங்களாக மாறுகிறது. அந்த மூல மண்டலத்தின் அதிர்வுகள் நான்கு கரங்களாக வாசலாக விரிந்து , மீண்டும் சுருங்குகிறது. அந்த நான்கு கரங்களுக்கு நடுவே உதித்த மந்திரம் சிவம் எனும் கண்ணால் பார்க்கக் கூடிய அனைத்துப் பொருட்களும் நடுவில் சிவத்திலிருந்து உதித்ததுதான். வெளிவந்த பொருட்கள் அனைத்தும் எட்டு வடிவத்தில் சுழலும் கோலி குண்டுகளாய் (1/0 ) வெப்பமாய் வெளி வந்து குளிர்ந்து அலர்ந்து நிலங்களாய் (தீட்டமாய்) வெப்பம், நீர், காற்று இவற்றின் எச்சில் தான் நிலம். வேறு எதுவும் என் கண்களுக்குத் தெரியவில்லை சிவம் விளைந்து சிவாயம் ஆகியது. ம் என்றால் அதிர்வு. ம என்றால் நீர். சிவ நடனம் இதுதான்.



245. ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே சோதி ! மூலமான நாடி சொல்லிறந்த தூவெளி ! ஆதி கூடி நெற் பரித்து அ காரமாகி ஆகமம். பேத பேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே! ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே என்றால் ஆதி கூடான சிவத்தை நோக்கி நாடி ஓடி . நாடி என்றால் சீராக விரும்பி என அர்த்தம். வெளிவந்த அந்த கூடு தேடி ஓடும் சூரியன் (சோதி). சூரியன் எங்கெல்லாம் செல்கிறதோ? அங்கெல்லாம் பூமியும் செல்லும். அந்த சோதியாகிய சூரியன் பூமியில் காலையில் கடலாகிய நீரில் மேல் எழும்பி மாலை கடலில் மறைந்து சுழன்று கொண்டே சிவத்தை நோக்கி திரும்பிக் கொண்டு உள்ளது என்பதை சொல்கிறார். மூலமான நாடி தூவெளி என்றால் தூய வெளி. அங்கே சொல் இறந்து ம் என்ற அதிர்வுடன் கூடிய தூ ய வெளி. இதே கருமுட்டை எனும் ஆதி கூட்டை பெண்களின் கருவறை நோக்கி அந்த ஆதியான ஒளி பொருந்திய வெப்பம், காற்று , சுத்திலம் எனும் நீர் மூன்றும் கூடி கருமுட்டை தரித்து நெல் பயிராகி பரித்து அண்டமாகிய அ காரம் உடலாக ஆகம விதிகளுடன் பிறக்கிறது. அந்த ஆதி மூன்றும் பேத பேதமாகி என்றால் , மூன்றும் கூடி பிறந்த உடல் வயதாகி பேத பேதமாகி சமநிலை அற்று இறந்து விடுகிறது என்கிறார்.



246 . பாங்கினோடு இருந்து கொண்டு பரமன் அஞ்செழுத்துலே! ஓங்கி நாடி மேலிருந்து உச்சரித்த மந்திரம். மூங்கில் வெட்டி நார் உரித்து முச்சில் செய் விதத்தினில், ஆய்ந்த நூலில் தோன்றுமே ! அறிந்துணர்த்து கொள்ளுமே! நமசிவாய, மசிவாயந , சிவாயநம, வாயநமசி , யநமசிவா, இப்படி ஓங்கி நாடியில் பாங்கு வாசிப்பது போல உச்சரிக்கும் பரமன் அஞ்செழுத்துலே. மூங்கில் வெட்டி நார் உரித்து சிறு முறங்கள் செய்வது போல 5 எழுத்துக்களையும் மாற்றி மாற்றிப் போட்டு உச்சரிப்பது எப்படி அதன் உண்மை தன்மைகள் என்ன? என மறை நூல்களில் ஆய்ந்து சொல்லப்பட்டு உள்ளதை புரிந்து உணர்ந்து கொள்ளுங்கள் என்கிறார். இது வெறும் வார்த்தைகளோ, எழுத்துக்களோ? அல்ல. அந்த எழுத்துக்களில் அறிவியலும், நம் வாழ்வியலும் முறம் போல பின்னிப் பினைக்கப்பட்டுள்ளது, என புரிந்து உணர்ந்து கொள்ளுங்கள் என்கிறார்.



251 . ஆரலைந்த பூதமாய், அளவிடாத யோனியும், பாரமான தேவரும், பலுதிலாத பாசமும், பூரணாத அண்டமும், லோக, லோக, லோகமும் சேர வெந்து போயிருந்த தேகம் ஏது செப்புமே? ஆறில் ஐந்து பூதமாய் என்றால் ஓம் எனும் 6-க்கு உள்ளே அ. உ, ம் எனும் விதை, கருமுட்டை, மற்றும் அது ஆணா? பெண்ணா? அதன் உடலியல் கூறுகள், மணவியல் கூறுகள் என உள்ளடக்கிய அந்த நாதம் கருமுட்டை ஆகிய ஆறாகிய மூன்றும் சேர்ந்து ஐந்து பூதங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அனைத்து தேவர்களும் (மனிதர்களும்), யோனி என்றால் இந்த தேவர்களின் (மனிதர்களின்) அமைப்பு எப்படி இருக்கிறது என்ற விளக்கத்துடன் கூடிய Software தான் கருமுட்டை. பதி, பசு, பாசம் எனும் மூன்றில் . பசு என்பது மனிதன், பதி என்பது இறைவன். பாசம் என்பது இறைவனால் படைக்கப் பட்ட பொருட்கள். மனிதன் , படைக்கும் இறைவனிடம் செல்லாம் இறைவன் படைத்த பொருட்களில் நாட்டம் வைக்கிறான். அதைத்தான் பழுதில்லாத பாசம் என்கிறார். ஏனென்றால் இறைவனால் படைக்கப்பட்டவைகள் தான் பாசம். அதில் பழுது இருக்காது. இந்த பாசத்தினால் ஈர்க்கப்பட்ட பாரமான தேவர்கள் (மனிதர்கள்) என்கிறார். பூரணாத அண்டமும் என்றால் பூரணமாக உள்ள அண்டம் எப்பொழுதுமே இருக்காது என்பது தான் அவர் சொல்வது. ஒன்று விரிந்து கொண்டு இருக்கும் அல்லது சுருங்கி ஒடுங்கிக் கொண்டு இருக்கும். என்பதைத்தான் பூரணம் பெறாத அண்டமும் என்கிறார். பிறந்து இறப்பது தான் உயிர்களின் இயல்பு. இப்படித்தான் இந்த அண்டத்தில் உள்ள லோக லோக லோகங்கள் எல்லாமே விரிந்து ஒடுங்கும்! என்கிறார். இப்படி வெந்து போன உடல்கள் எப்படி திரும்ப வரும், சொல்லுங்கள் என்கிறார்.


252. என் அகத்துள் என்னை நான் எங்கும் நாடி ஓடினேன். என் அகத்துள் என்னை நான் அறிந்திலாத தன்மையால் என் அகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின், என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே! என் உடலில் உயிர் எங்கு உள்ளது, அந்த உயிராகிய நான் எங்கு இருக்கிறேன் என தெரிந்து கொள்ள என் அகத்துள் நாடி ஓடி தேடினேன் என்கிறார். என் அகமாகிய உடலின் உள்ளே நான் எப்படி இருப்பேன் என அறிந்திலாத தன்மையால் , தேடிய போது அந்த என்னகத்துள் நான் எப்படி இருக்கிறேன் என்று அறிந்து உணர்ந்து கொண்ட பின். என் அகத்துள் என்னையன்றி யாதும் இல்லை இல்லை இல்லையே என்றால் என் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் என்னைப் பற்றிய நாதம் (என்னைப் பற்றிய கருத்து) உறைந்துள்ளது. ஆகவே என் உடலே நான்தான். என்னை அன்றி யாதும் இல்லை என்கிறார்.

252. என் அகத்துள் என்னை நான் எங்கும் நாடி ஓடினேன். என் அகத்துள் என்னை நான் அறிந்திலாத தன்மையால் என் அகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின், என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே! என் உடலில் உயிர் எங்கு உள்ளது, அந்த உயிராகிய நான் எங்கு இருக்கிறேன் என தெரிந்து கொள்ள என் அகத்துள் நாடி ஓடி தேடினேன் என்கிறார். என் அகமாகிய உடலின் உள்ளே நான் எப்படி இருப்பேன் என அறிந்திலாத தன்மையால் , தேடிய போது அந்த என்னகத்துள் நான் எப்படி இருக்கிறேன் என்று அறிந்து உணர்ந்து கொண்ட பின். என் அகத்துள் என்னையன்றி யாதும் இல்லை இல்லை இல்லையே என்றால் என் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் என்னைப் பற்றிய நாதம் (என்னைப் பற்றிய கருத்து) உறைந்துள்ளது. ஆகவே என் உடலே நான்தான். என்னை அன்றி யாதும் இல்லை என்கிறார்.



253. விண்ணி நின்று மின் எழுந்து, மின் ஒடுங்குமாறு போல், என்னுள் நின்று என்னும் ஈசன் என் அகத்துள் இருக்கையால். கண்ணில் நின்று கண்ணில் தோன்றும் , கண் அறிவிலாமையால், என்னுள் நின்ற என்னையும் , யான் அறிந்ததில்லையே! மின்னல் விண்ணிலேயே எழுந்து விண்ணிலேயே ஒடுங்குகிறது. வரும் கோடை மழையின் போது பூமியிலும் இறங்கும். எனக்குள் நின்று உள்ளம் எனும் என்னும் ஈசன் என்அகத்துள் அவனும் இருப்பதால், இந்த கண்ணின் வழியாகத்தான் காட்சிகள் பார்க்கிறோம். ஆனால் அந்தக் காட்சிகளின் அறிவு அந்த கண்ணுக்குத் தெரிவது இல்லை. அதே போல் எண்ணுள் என்னை இயக்கிக் கொண்டுள்ள உள்ளம் எனும் இறைவனையும், எனக்கு இதுவரை அறிந்ததில்லையே என்று அங்கலாய்க்கிறார்.



254. அடக்கினும் அடக் கொனாத அம்பலத்தின் ஊடு போய். அடக்கினும் அடக் கொனாத அன்பிருக்கும் என்னுளே! இடக்கினும், இருக்கினும் கிலேசம் வந்து இருக்கிடும். நடக்கினும் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே!.... அடக்க நினைத்தாலும் அடக்க முடியாத ஊற்றாக வரும் எண்ணங்களின் மூலம் தான் சிற்றம்பலம். அந்த அம்பலத்தின் ஊடு போய் பார்த்தால் , பேராற்றல் பெருங் கருணை கொண்ட அன்பின் இருப்பிடமாக எண்ணுள்ளே அடக்கினும் அடக்கொனாமல் இருக்கிறது. உள்ளமான அதன் சொன்னபடி கேட்காமல் மனம் போன போக்கில் இடக்கு செய்து கொண்டு இருக்கினும், கிலேசம் வந்து நம்மை இருக்கி விடும் என்கிறார். கிலேசம் என்றால் கவலை, துக்கம், வருத்தம் என பொருள். உள்ளம் எனும் நாதம் நம்மோடு இடைவிடாமல் பேசிக் கொண்டே இருப்பதைத்தான் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே !என்கிறார்.





சிவவாக்கியர் சித்தர் 10

226 


227. பண்ணி வைத்த கல்லையும் பழம் பொருளதென்று நீர்

எண்ணமுற்று என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள் .
பண்ணவும் படைக்கவும் படைத்து வைத்து அழிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த வொன்றை நெஞ்சிலுண்ணுமே.

பண்ணி வைத்த கல்லையும் என்றால் , கொடிமரம் நட்டு அதன் சமநாள் நிழலின் கோட்டில் அடையாளமிட்டு ஒரு மேடை கட்டி அதில் ஒரு கல்லை நட்டு வைத்து அடையாளப் படுத்தி அந்த மேடையில் அமர்ந்து கொடி மரத்தின் வழியாக வான் கவனித்து, அதில் ராசிகள், நல்சித்திரங்கள், சூரியன் , சந்திரன் மற்றும் கோள்களின் நகர்வை கவனித்தார்கள். அந்த வளமையை நாம் மறந்து விடுவோம், என்று சிவவாக்கியர் எண்ணி இருக்க மாட்டார். அப்படி அடையாளத்திற்காக நட்ட கல்லை அநாதியான இறைவன் என்று எண்ணமுற்று நீர் என்ன என்ன பேர் எல்லாம் வைக்கிறீர்கள் ஏழைகாள் என்கிறார்.
இந்த அண்டத்தில் உள்ள அனைத்தையும், பண்ணவும், படைக்கவும், படைத்து வைத்து அழிக்கவும் , சிவம், சக்தி எனும் இரண்டும் ஒன்னுமாகி என்றால், சத்தமும், பொருட்களும், நாதத்தில் இருந்து பிறந்து சத்தம் சக்திகளாகிறது. சிவம் பொருள்களாகிறது. பின் இரண்டும் ஒடுங்கி அதிர்வுகளாகி (நாதம்) information ஆக நாதம் ஆகி விடும். மீண்டும் பெரு மலர்வில் மலர்ந்து அண்டமாகி சத்தம், பொருட்களாக, சிவமும், சக்தியாக மாறும். இப்படித்தான் பிண்டத்திலும், விதை, கருமுட்டை என உருவாகி, உடலாகி நெஞ்சில் நாதமாக இதயமாக, அன்பாக லப்டப் எனும் நாத லயமாக நம்மை உண்டு கொண்டு உள்ளது.



228. நாலதான யோனியுள், நவின்று நின்று ஒன்றதாய்,
ஆறதான வித்துலே அமர்ந்து ஒடுங்குமாறு போல்,
சூலதான உட் பலன் சொல்வதான மந்திரம்,
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே!.

இந்த உலகில் உள்ள உயிரினங்களை நான்கு விதமான யோனி பேதங்களாக பிரிக்கலாம்.
1. உப்புசத்தில் (வெப்பத்தில்) பிறக்கும் உயிரினங்கள் புழு, பூச்சிகள் .
2. விதையில் பிறக்கும் உயிரினங்கள் மரம், செடி, கொடிகள்.
3. முட்டையில் பிறக்கும் உயிரினங்கள். பாம்பு, பல்லி, பறவை இனங்கள்.
4. குட்டி போட்டு பிறக்கும் உயிரினங்கள்.
இப்படி நான்கு வகையான யோனி பேதங்களில் நான்காவதான குட்டி போட்டு பிறக்கும் உயிரினங்களில் மனிதன் பிறக்கிறான். அந்த நாலதான யோனியில் , அதாவது பெண்களின கருவறையில் நவின்று நின்று ஒன்றதாய் என்றால் அங்கே கருமுட்டையாக உருவாகி மலர்ந்து காத்திருப்பது ஒன்றதாகி இருக்கும் நாதம். (அதிர்வு).
ஆறதான வித்தின் உள்ளே அதாவது ஆண்களின் விதைப் பையில் விதையாக இருக்கும் அ எனும் உயிர் ஒளியாக அந்த உயிரைப் பற்றிய அத்தனை தகவல்கள் அடங்கிய பெட்டகமாக அமர்ந்து ஒடுங்குமாறு போல்,
சூலதான உட்பலன் சொல்வதான மந்திரம் ஓம் எனும் அ உம் உ என்றால் உருவம் உடல் சூல் கொண்டு கருவாகி உருவாகி, உடலாக பிறக்கிறது.
இந்த உயிர் உடலாக பிறக்கும் தத்துவத்தை மேல் நிலையில் இருக்கும் ஞானிகள் விரித்து உரைக்க வேணுமே! என்கிறார்.



229. அருவாமாய் இருந்த போது, உன்னை அன்று அறிந்திலேன்.
உருவமாய் இருந்த போது உன்னை நான் அறிந்தனன்.
உருவினால் தெளிந்து கொண்டு கோதிலாத ஞானமாம்,
பருவமான போதலோ பரப்பிரம்மம் ஆனதே!.

நான் அருவமாக இருந்த போது என்றால் இந்த உடல் இல்லாமல் உயிராக இந்த உலகில் ஒளியாக நாதமாக அருவமாக இருந்த போது உன்னை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. அப்பா அம்மாவுக்கு மகனாக உருவாக உடலாக உருவமாய் இருந்த போதுதான் உன்னை என்னால் முழமையாக உணர முடிந்தது. இந்த உருவத்தால் இந்த உலகினை , இறைவனை ஐந்து வகையான ஞானேந்திரியங்கள் வழியாக அறிந்த அறிவுதான் (ஞானம் தான்) நான் பருவம் அடைந்து நான் அடுத்த உயிரைப் படைக்க பருவம் அடைந்த போதுதான் பரப்பிரம்மம் அதாவது அந்த அறிவு எனும் ஒளிதான் விதையாக விதைப் பைக்குள் பரப் பிரம்மமாக ஆனது என்கிறார்.



230. பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்,
மறப்பது, நினைப்பது மறந்ததை தெளிந்ததும்,
துறப்பதும், தொடுப்பதும், சுகித்து வாரி உண்பதும்,
பிறப்பதும், இறப்பதும் பிறந்து வீடடங்குமே!

பதி, பசு, பாசம் எனும் மூன்று பொருள்கள் தான் இவ்வுலகில் உள்ளன. அதில் பதி என்பது இறைவன். பசு என்றால் உயிர்கள், பாசம் என்றால் மற்ற உயிர்களும், அனைத்துப் பொருட்களும் பாசம் எனப்படும்.
உயிர் இறைவனிடம் நாடாமல் பொருட்களின் மேல் நாட்டம் கொண்டு அதை முழுமையாக அடைய முடியாமல் இன்னும் , இன்னும் என பிறப்பு இறப்பு மீண்டும் பிறப்பு என சோர்வுற்று இறைவனை நாடி பிறந்திடாமல் இருப்பதும், பிறந்து இந்த பிறவிகளை எதற்காக எடுக்கிறோம் என மறப்பது, மீண்டும் நினைப்பது, மறந்ததை தெளிந்ததும்,
பின் இந்த பாசம் எனும் சக உயிரினங்களையும், பொருட்களையும், துறப்பதும், மீண்டும் மனம் கேட்காமல் தொடுப்பதும், ஐந்து புலன்களினால் சுகித்து வாரி உண்பதும் பிறந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து தெளிந்ததும் வீடு பேறு அடைந்து பிறந்திடாமல் இந்த உயிர் அடங்கும் என்கிறார்.




231. கண்ணிலே இருப்பனே, கருங்கடல் கடைந்த மால்,
வின்னிலே இருப்பனே, மேனி அங்கு நிற்பனே!
தன்னுளே இருப்பனே ! தராதலம் படைத்தவன்,
என்னுலே இருப்பனே எங்குமாகி நிற்பனே!

கண்ணிலே ஒளியாக வரும் ஒளியினைக் கொண்டு அனைத்து வடிவங்களையும், அடையாளம் கண்டு கொள்கிறோம் . அந்த ஒளியாக இருப்பவன் இறைவன், கருங்கடல் என்றால் எட்டு வகையான சக்திகள். சக்திகள் தான் அனுக்களாக பொருட்களாக ஒன்றி இருந்தது வெடித்து சத்தத்தால் பொருட்களாக மாறி மீண்டும் சக்திகளாக மாறுவதைத் தான் கருங்கடல் கடைந்தமால் என்கிறார். மால் என்றால் பொருட்கள் என அர்த்தம். இதையெல்லாம் அறிந்து சொன்னவர் நம் திருமால்.
வின்னிலே இருப்பவன் இறைவன் அவன் மேனி தான் எங்கும் பரந்து விரிந்து கண்ணுக்குத் தெரிகிறது. தெரியாமல் இருக்கும் அதிர்வுகளாகவும். மற்ற உயிரினங்களின் உள்ளும் இறைவன் இருப்பனே, தராதரம் என்றால் மலை எனும் தராதரம் படைத்தவன், அனைத்து உயிரினங்களிலும் உள்ளான் என்கிறார். என்னுள்ளும் இருப்பனே, எங்கும் ஆகி நிற்பனே அந்த இறைவன் என்கிறார். இறைவன் தான் எங்கும் எதிலும், கானும், உணர்ந்தும், உணர்த்தும, அனைத்தும்.



231A. ஆடு நாடு தேடினும். ஆனை சேனை தேடினும்,
கோடி வாசி தேடினும், குறுக்கே வந்து நிற்குமோ?
ஓடி இட்ட பிச்சையும், உகந்து செய்த தர்மமும்,
சாடி விட்ட குதிரை போல தர்மம் வந்து நிற்குமே!

ஆடு நாடு என தேடி தேடி செல்வம் சேர்த்தால் கடைசி காலத்தில் உதவும் என நினைக்கிறோம். ஆனை சேனை என காவலுக்கு வைத்து பாதுகப்பாக வாழலாம் என்றாலும் கண்கூடாக பார்க்கிறோம் எதுவும் நிலைப்பதில்லை. ஒய்ந்த போது ஆனை சேனை, ஆடு நாடு எல்லாம் வேறு ஒருவருக்குப் போய் விடுகிறது. பாதுகாப்பு அற்று இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. கோடி வாசி செய்து உடலை நன்றாக வைத்து இருந்தாலும், காலன் வந்து அழைக்கும் போது வாசி குறுக்கே வந்து காப்பாற்றாது என்கிறார். சரி, ஓடி இட்ட பிச்சை அல்லது, தேவைப் பட்டவர்களுக்கு காலத்தில் உகந்து செய்த தர்மம் இது ஏதாவது குறுக்கே வந்து காலனிடம் நிற்குமா? என்றால் குதிரையை அவிழ்த்து சாடி விட்டாலும் அது சென்று மீண்டும் அதன் வீட்டிற்குத் திரும்பி வந்து நிற்பது போல நாம் செய்த தர்மங்கள் நம் வாழ்நாளில் நமக்குத் தேவைப்படும் போது காலனை எதிர்க்க குறுக்கே வந்து நிற்குமே என்கிறார்.



232. எள் இரும்பு கம்பிளி, இடும்பருத்தி வெண்கலம்,
அள்ளி உண்ட நாதனுக்கோர் ஆடை மாடை வச்திரம்,
உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதான ஈதீரேல்,
மெல்ல வந்த நோயனைத்தும் மீண்டிடும் சிவாயமே!


எள். இரும்பு, கம்பிளி, ஆடையாக இடும் பருத்தி, வெண்கலம் என அனைத்துப் பொருட்களிலும், அணுக்களாக இருக்கும் நாதனுக்கு ஆடை மாடை வச்திரம் அணிந்து கொண்டாடுவதை விட நம் உடலில் நாம் உண்ட உணவை செரித்து ஆற்றலாக வேதி மாற்றம் செய்யும் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு உற்றதான உணவை மட்டும் கொடுத்து வாழ்ந்தால் நமக்கு மெல்ல வந்த நோய்கள் அனைத்தும் விலகும் என்கிறார்.



233. ஊரிலுள்ள மனிதர்கால் , ஒரு மனதாய் கூடியே!
தேரிலே வடம் பிடித்து, செம்பை வைத்து இழுக்கிறீர்.
யாரினாலும், அறியொனாத ஆதி சித்த நாதரை,
கோதிலாத மனிதர் பன்னும் புரளி பாரும் பாருமே!...

ஊரில் உள்ள மக்கள் கோயிலில் கூடி ஒரு மனதாய் தேர் இழுக்க முடிவு செய்து வடம் பிடித்து இழுக்கிறார்கள். அதில் இறைவன் என ஒரு செம்பினால் செய்த சிலையை வைத்து தேரை இழுக்கிறார்கள்.
இந்த உலகில் உள்ள யாரினாலும் அரிய முடியாத ஆதிநாத சித்தரை என்றால் ஆதியாக தோன்றிய நாத மாக அதிர்வாக உள்ள இறைவனை மனிதர்கள் அறிய முடியாது.
கோதில் என்றால் குற்றமற்ற என்று பொருள். கோதிலாத மனிதர்கள் என்றால் குற்றமுள்ள மனிதர்கள் இறைவனின் முன்னாள் நான் பெரியவன், எனக்குத் தான் முதல் மரியாதை என பன்னும் புரளி பாரும் உலகெங்கும்மே என்கிறார்.



234. மருள் புகுந்த சிந்தையால், மயங்குகின்ற மாந்தரே,
உருக் கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லீரேல்,
குரு கொடுத்த தொண்டரும், குகனொடு இந்த பிள்ளையும்,
பருத்தி பட்ட பண்ணிரண்டு பாடுதான் படுவரே!

மருள் என்றால் இறைவனின் அருளுக்கு எதிர்ப்பதம். நாமாக மனத்தால் எதையாவது நினைத்துக் கொண்டு அதை உண்மை என நம்பி அவசரக் குடுக்கைகள் போல அடுத்தவர்களை அடிமைப் படுத்தி அதிகாரம் எனும் புகழுக்கு மயங்குகின்ற மாந்தரே அவை நிலையற்றவை.
இறைவன் அருளும் உண்மையான வாழ்வியலும் , இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து கிடைக்கும் ஆனந்தத்துடன் இருப்பதும் தான் அருளுடன் வாழ்வது என அர்த்தம் என்கிறார்.
குகன் என்றால் முருகன என்பது அனைவரும் அறிந்ததே.
முருகன் சூரியனின் ஓட்டத்தை நன்கு அறிந்து சூரியனின் ஓட்டத்தில் ஏற்படும் சக்தி மாற்றத்தால் பூமியில் ஏற்படும் ஊழியை முன்னரே அறிந்து 12,600 வருடங்களுக்கு முன்பு குமரிக் கண்டத்தில் இருந்து பெரும்பாலான மக்களையும் காவடியுடன், கால்நடைகளுடன் பாதுகாப்பாக இலங்கை வரை கொண்டு சேர்த்தவர்.
சக்திமைய பின் சுழற்சியால் சூரியனின் பாதை சுருள் வடிவில் செல்லும் போது சக்தி மாற்றத்தால் பூமியின் உள்புறம் இருக்கும் உலோக குண்டின் காந்தப்புலம் மாறுவதால் ஊழி உருவாகும் என முன் அறிந்து வாண் பகையை புரிந்து அதை வெற்றி கொண்டவர். பின் இலங்கை வந்து தண்டு இறங்கியவுடன் பங்குனி உத்திரத்தில் மலை மக்களுடன் வேலெறிந்து வாண் பகையை வென்றவர்.
அறம் சார்ந்த வாழ்வியலை வடித்தவர்.
அதில் குரு எனும் வியாழன் கோள் ஒருமுறை சூரியனை சுற்றி வருவதற்குள் தொண்டரான பூமி 12 முறை சூரியனை சுற்றி வருவதை அறிந்து , மனிதனின் பருவங்களை 7 ஆக பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் 12 வருடங்கள் என பிரித்தார்.
அதில் முதல் பருவமான பிள்ளை பருவம் 12 ஆண்டுகளில் அவர்கள் இந்த உலகை நன்கு புரிந்து கொள்ள பருத்தி ஆடையாவதற்குள் 12 முறை வடிவம் மாறி அடிபட்டு பாடுபட்டு அது துணியாக மாறுகிறது. அது போல குருவிடம் அடிமையான தொண்டரும் 12 வருடங்கள் குருவுக்காக உழைத்து பாடுபட்டு அந்த ஓம் எனும் உருக்கொடுத்த மந்திரத்தை அறிந்து கொள்வார்கள்.
அந்த ஓம் எனும் மந்திரத்தை அறிந்து அதன் உண்மை தத்துவத்தை வாழ்வியலுடன் அறிந்து அதை கொண்டு வாழ்வியலை நீந்த கற்றுக் கொண்டால் வாழ்க்கை ஆனந்தமாக நிம்மதியாக எளிமையாக நன்றாக இருக்கும் என்கிறார். குகனொடு இந்த பிள்ளையும் அந்த பருவத்தை சரியாக கடந்தால் தான் அந்த குழந்தை மற்ற பருவங்களை எளிதாக கடந்து விடும் என்கிறார்.



235. அன்னை கர்ப்ப அறை அதற்குள் அங்கியின் பிரகாசமாய்,
அந்த அறைக்குள் வந்திருந்து , அரிய விந்து ரூபமாய்,
தன்னை ஒத்து நின்ற போது தடையறுத்து வெளியதாய் .
தங்கு எனப் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே!

அன்னை கர்ப்ப அறை அதற்குள் தீ பிழம்பின் வெளிச்சத்துடன் பிரகாசமாய், அந்த கர்ப்பப் பைக்குள், அப்பாவின் விதைப் பையிலிருந்து விந்து ரூபத்தில் வால் வடிவில் நீந்தி வந்த ஏராளமான விந்து ரூபங்களில் ,
அன்னை கர்ப்பத்தில் கருமுட்டையில் நாதமாக ( information pocket) எதை உள்ளே விட வேண்டும் என தகவல் அடங்கிய அதிர்வு கருமுட்டையில் இருக்கும். அதுதான் நாதம். அதனுடன் எந்த விந்து ரூபம் ஒத்து நின்ற போது அந்த ஒரு ரூபத்தை மட்டும் அந்த கருமுட்டை உள்வாங்கி தடையறுத்து இடை வெளி கொடுத்து உள்வாங்கி இங்கே தங்கி உடலை வளர்த்துக்கொள் என அந்த ரூபத்துக்கு மட்டும் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்தது என பெரிய அறிவியலை எளிதாக பாடலில் போகிற போக்கில் சொல்கிறார்




237. பிடித்த தண்டும் உம்மதோ? பிரம்மமான பித்தர்காள்.
தடித்த கோலம் அத்தை விட்டு , சாதி பேதம் கொண்டீரோ?
வடித்திருந்த ஓர் சிவத்தை வாய்மை கூற வல்லீரேல்,
திடுக்கமுற்ற ஈசனை சென்று கூடலாகுமோ?

பிரம்மம் என்றால் இந்த பிரம்மாண்டமான பேரண்டம், அதன் அத்தனை பொருட்களும் , ஆற்றல்களும் , உயிர்களும், சேர்ந்த அனைத்தும் தான்.
மனிதனும் பிரம்மத்தின் கூறுதான். அப்படி உன் பிடித்த தண்டின் மூலமாக உற்பத்தி ஆகும் உயிர்களும் பிரம்மத்தின் கூறுதான்.
அது நம்முடையது அல்ல. பிரம்மமான பித்தர்காள் இதை உணர்ந்து கொள்ளுங்கள் என்கிறார்.
கண்ணுக்குத் தெரியாத உயிர் அணுக்களில் இருந்து தடித்து அந்த நாதம் விந்து பிரம்மத்தின் உதவியில் குழந்தையாகி வளர்ந்து மனிதர்களானவர்களை சாதி பேதங்களாக பிரித்து கொள்கிறீர்களே இது முறையில்லை என்கிறார்.
இந்த பல வடிவங்களாக , மனிதர்களாக இருப்பவை அனைத்தும் அந்த ஓர் சிவம்தான் . அந்த வாய்மையை நினைத்து அதைத்தான் அனைவருக்கும் கூறி புரிய வைக்க வேண்டும்.
அப்படி செய்யாமல் எப்படி அந்த திடுக்கமுற்ற ஈசனைச் சேர்ந்து கூட முடியும் என கேட்கிறார். திடுக்கமுற்ற ஈசன் என்றால் இந்த பிரம்மாண்டமான அனைத்தும் ஈர்த்தல் எனும் பேராற்றலால் இயங்கிக் கொண்டு உள்ளதைத் தான் அப்படிக் கூறுகிறார். அதுதான் திடுக்கமுற்று என்றால் வெடித்து சிதறி மீண்டும் ஈர்த்துக் கொண்டு இருக்கும் ஈசனை சென்று கூட வேண்டும் என்றால் சாதி பேதம் நம் மனதில் கலைந்து இனக்கமாக இயற்கையுடன் இயைந்து ஆனந்தமாக வாழ்ந்து பிறவாமை பெற்று அவனை ஈசனை கூட வேண்டும் என்கிறார்.



238. சகதி நீ! தயவு நீ! தயங்கு சங்கின் ஓசை நீ !
சித்தி நீ! சிவமும் நீ! சிவாயமாம் எழுத்து நீ!
முக்கி நீ! முதலும் நீ! மூவரான தேவர் நீ !
அத்திறமும் உம்முளே! அறிந்துணர்ந்து கொள்ளுமே!.

எட்டு வகையான சக்திகள் உண்டு. அந்த சக்திகளால் உருண்டு திரண்டு ஆனவன் தான் நீ! என்கிறார் - தயவு என்றால் அருள், அன்பு என்பதாகும். அந்த அருள் நீ என்கிறார். தயங்கு என்றால் அசைவு என்று பொருள். அந்த அசையும் அதிர்வான ஓசை நாதம் நீ! என்கிறார். சித்தமும் நீ என்கிறார். அதாவது நாம் அறியாமல் நம் உடலில் அநேக வேலைகள் சரியாக நடந்த வண்ணம் உள்ளது. அதை சித்தம் என்போம். அந்த அறிவு சித்தி அது தான் நீ! அண்டத்தில் உள்ள அத்தனை பொருட்களையும் கொண்டு உருவானவன் நீ .அதனால் உன்னை சிவம் என்கிறார்.
உயிர் பிறவாமல் இருப்பதுதான் முக்தி அதற்குத் தகுதியானவன் நீ! இதற்கெல்லாம் காரணமான முதல் ஆதி அதுவும் நீ என்கிறார். மூவரான தேவர் நீ என்றால், வெளி, காற்று, வெப்பம் எனும் முதல் மூன்றும் தான் ஆதியான தேவர் அவர்கள் தான் நீ என்கிறார். இப்படி அத்தனை திறன்களும் உம்முள்ளே பரிபூரணமாக இருக்கிறது. அதை அறிந்துணர்ந்து கொள்ளுங்கள் என்கிறார்.




239. சட்டையிட்டு மணி துலக்கும், சாத்திர சழக்கரே...
பொத்தகத்தை மெத்த வைத்து வேதம் ஓதும் பொய்யரே.....
நிட்டை ஏது ஞானம் ஏது? நீர் இருந்த அக்சரம்....
பட்டை ஏது? சொல்லிலே பாதகக் கபடரே....

பட்டுச் சட்டைகளை இட்டு மணிமாலைகளை கழுத்தில் போட்டு , சாத்திரங்கள் ஓதும் சழக்கர்களே! சழக்கர் என்றால் கெட்ட எண்ணம் உள்ளவர்கள் என அர்த்தம். புத்தகங்களை அடுக்கி அதில் உள்ள உண்மைகளை மறைத்து வேதம் ஓதும் பொய்பரே!
உண்மையான நிட்டை என்றால் என்ன ஞானம் எது ? நிட்டை என்றால் அந்த சாதாரண மூச்சு 4 நொடி அதை அறிவீரோ? சரம் என்றால் மூச்சு.
மிகினும் குறையினும் நோய் செய்யும்.
பட்டை ஏது? நெற்றியில் அணியும் பட்டையின் அர்த்தம் நிலநடுக்கோடு, கடகரேகை, மகரரேகை என நம்முன்னோர்கள் நன்கு பூமியை அறிந்து இருந்தார்கள் என்பதன் பொருள்.
அதை மறைத்த பாதகக் கபடரே! என வசை பாடுகிறார்.